உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் ரூ. 39,000ஐ எட்டியது..

 
தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து  சவரன் 39,000 ஐ எட்டியுள்ளது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் இன்று  ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ, 39,000  விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்   சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 4,875க்கு விற்பனை ஆகிறது.  சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்த நிலையில்,   இன்று  மேலும் ரூ.  440 உயர்ந்திருக்கிறது.  சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 896  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.