இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி - அதிரடியாக குறைந்த தங்கம் விலை

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 37,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்தது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,741 ஆகவும், சவரன், ரூ.37,928 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி 
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 37,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 26 ரூபாய் சரிந்து 4,715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் தூயத் தங்கம்  ஒரு கிராம் 5117 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 40,936 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.64.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 சரிந்து ரூ.64,000 ஆகவும் விற்கப்படுகிறது