மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 42,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,320க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.5,323-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.42,584-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒருகிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை ஆகிறது.