தொடர்ந்து 4வது நாளாக சரிந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் நிம்மதி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 39,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில், தொடர்ந்து 4-வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களில் சவரனுக்கு ரூ.528 குறைந்துள்ளது. செவ்வாய்கிழமையான நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15   குறைந்து ரூ.4905-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து  ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய ( புதன்கிழமை) நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4885-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 67 ரூபாயாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவாதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.