மீண்டும் குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் சற்று நிம்மதி!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று உயர்ந்தது. சென்னையில் நேற்று முன் தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.74.50க்கு விற்பனை செய்யப்பட்டது

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,320க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.