இல்லத்தரசிகள் சற்று நிம்மதி! - தங்கம் விலை இன்று குறைந்தது

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. கடந்த 29ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,760க்கு விற்கப்பட்டது. 30ம் தேதி 160 ரூபாயும், 31ம் தேதி 120 ரூபாயும் அதிகரித்தது. அதேபோல் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,528க்கும் விற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து,   சவரன் 41,664க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று மாலையும் தங்கம் விலை ஏற்றம் கண்டது. இந்த தொடர் விலையேற்றம் இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5228 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் சரிந்துள்ளது.  வெள்ளியின் விலை கிராமுக்கு 15 காசுகள் சரிந்து  ரூ.74க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு 1500 ரூபாய் சரிந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.