அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை - இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதேபோல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 42,360-க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,325க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.74.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.