அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி!

 
gold

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்தது.  கடந்த 9-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. இதனனையடுத்து தங்கம் விலை ஏற்ற, இறங்கங்களை சந்தித்து வந்தது. நேற்று முன் தினம் சவரனுக்கு  உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்து ஒரு சவரன் 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  நேற்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00ஆகவும்,  கிலோ ரூ.74 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்பட்டது.  

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 296 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.75 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.