அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து 41,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
  
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது. 
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,150க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 74.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 200 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து 41,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,191க்கும் சவரன் ரூ.41,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75.50க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 100 ரூபாய் அதிகரித்து 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.