தொடர்ந்து இறங்கு முகத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதேபோல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 42,360-க்கு விற்பனையானது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.74.80 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74 ஆயிரத்து 800 ஆக விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.