மோடியே திரும்பி போ -டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

 
கொ

மோடியே திரும்பி போ என்ற கேஷ்டேக் டுவிட்டரில்  இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.  இது பாஜகவினருக்கு பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

 சென்னையில் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் 44வது உலக சதுரங்க போட்டியின் துவக்க விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை 28/7/2022 மாலை அந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.   இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் சிறப்பு விருந்தினர்கள் பங்கே இருக்கிறார்கள்.


 பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் .

இந்த நிலையில் மோடியே திரும்பி போ என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .  முன்பு ஒரு முறை பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது மோடியே திரும்பி போ என்ற எதிர்ப்பு முழக்கத்தை ஹேஷ்டேக்காக ட்ரண்டு செய்ததோடு ,   கருப்பு பலூன்களை கட்டியும் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் பறக்க விட்டு மோடிக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.  


 இந்த நிலையில்  தற்போது ’’வள்ளுவனே உயிருடன் இந்தால்  #Go_Back_Modi. தான் சொல்லுவார்..’’ என்றும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.  திமுக ஆட்சியில் மோடியே திரும்பி போ என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.