வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கு - காவல் ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள்!

 
secxual Abuse

வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்  இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள்  என போக்ஸோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Abuse

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷாகிதா பானு,  அவருக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ,நாகராஜ், மாரீஸ்வரன் ,பொன்ராஜ் ,மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வெங்கட்ராமன் , ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக் , திரிபுராவை சேர்ந்த தெபாசிஸ் நாமா  உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

women abuse

 சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் இது தொடர்பாக 21 பேரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர் . இதில் ஒருவர் இறந்து விட இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தலைமறைவாகினர் . இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ  நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி  வைத்திருந்தார்.

abuse

இந்நிலையில்  போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது . இந்த வழக்கில் காவல் ஆய்வாளர், சிறுமியின் உறவினர் ஷகிதா, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உட்பட 21 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் தீர்ப்பு விபரம் வருகிற 19ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.