பூந்தமல்லி சாலையில் ராட்சத பள்ளம்- மெட்ரோ பணிகளால் நடந்த விபரீதம்

 
பள்ளம்

மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் போது பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் திடீரென விழுந்த ராட்சத பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளம்

சென்னை கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆங்காங்கே பில்லர்கள் அமைக்கும் பணிக்காக தடுப்புகள் வைத்து வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்லும் பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் திடீரென பத்தடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் விழுந்ததால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளானார்கள்.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த ஊழியர்கள் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாத வகையில் சாலையில் தடுப்புகள் அமைத்தும் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்பி வருகின்றனர். மெட்ரோ ரயில் பணிகளுக்காக திடீரென சாலையில் விழுந்த ராட்சத பள்ளத்தை தற்போது பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் நசரத்பேட்டை வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காக முக்கிய சாலையில் திடீரென விழுந்த ராட்சத பள்ளத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.