யார் அந்த பிச்சைக்காரன் அண்ணாமலை?- காயத்ரி ரகுராம்

 
gayathri raghuram annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

Annamalai

மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியதை அடுத்து அண்ணாமலைக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளது. இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அண்ணாமலைக்கு இனி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், “கர்நாடகா வளர்ப்பு மகன் சென்னை ரெசார்ட்டில் ஜாலியான இரவுக்குப் பிறகு விமான பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தினார். தலைவர்களுக்கு ஹனிட்ராப் அச்சுறுத்தல் கொடுத்தார்,பெண்களைப் பற்றி தவறாகப் பேசுவதற்கும் பணம், போஸ்டிங் கொடுக்கப் போகிறார். அவருக்கு Z வகை பாதுகாப்பு.தமிழக மக்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் இவ்வளவு பொய்களுக்குப் பிறகு, அண்ணாமலைக்கு பாதுகாப்பு?நீங்கள் சொல்வது போல் (திமுக மட்டுமல்ல) மத்திய/மாநில அமைச்சர்கள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தில் வாழ்கிறார்கள், மக்களின் வரிப்பணத்தால் நீங்களும் Z பிரிவு பாதுகாப்பை எடுக்கிறீர்கள். அப்புறம் யார் அந்த பிச்சைக்காரன் அண்ணாமலை?
இலவச படகு சஃபாரியில் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம் ஆனால் எனக்கு மட்டும் லைஃப் ஜாக்கெட் வேண்டும்.. மற்ற காரியகர்த்தா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால் மக்களின் வரிப்பணத்தில் இருந்து எனக்கு மட்டும் Z பிரிவு பாதுகாப்பு வேண்டும். #Annamalie” என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.