என்னை பைத்தியம் என்கின்றனர்! ட்விட்டரில் காயத்ரி ரகுராம் கதறல்

 
gayathri-4

காயத்ரி ரகுராமுக்கும் அண்ணாமலைக்குமான மோதலில் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.  பதிலுக்கு திமுகவினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து வரை நடத்துகிறார் என்று காயத்ரி  மீது அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். 

gyi

இந்த நிலையில் கட்சியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருந்தார் காயத்ரி ரகுராம்.  அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார் அண்ணாமலை .  பாஜகவில் இருந்து முழுமையாக தான் நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார். 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “கடந்த இரண்டு வருடங்களில் கர்நாடகா வாரிசு சக்தி வார்ரூம் யூடியூப் மூலம் பல லட்சங்கள், கோடிகளை செலவழித்து பாஜகவிற்குள் நுழைந்துள்ளது. எனது ட்வீட்களுக்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல்,  அண்ணாமலை தனது கதறலை வார்ரூம் மூலம் அவிழ்த்துவிட்டார். இப்போது அண்ணாமலையின் வார்ரூம் என்னை திமுக ஸ்லீப்பர் செல் என்று அழைக்க முடியவில்லை. அதனால் இப்போது அவர்கள் என்னை கெட்ட வார்த்தைகள் சொல்லியும், என்னை பைத்தியம் என்றும், என் பெண்மையையும் அவமானப்படுத்துகிறார்கள். சூப்பராக ஹிந்து தர்மத்தை மற்றும் சித்தாந்தத்தைப் பரப்புகிறார்கள்.



பல உண்மையான காரியகர்த்தாக்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இப்போதும் கூட ஒவ்வொரு கட்சியிலும் பல தொண்டர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள். தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருமுறை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கொடுத்தால், தேசத்திற்காக உயிரை தியாகம் செய் என கேலி செய்தார்கள். இப்போது வளர்ப்பு மகன் அழுதுகொண்டே கெஞ்சி Z பிரிவு பாதுகாப்பைக் கோரினார், வளர்ப்பு மகனுக்கு தந்தையால் இப்போது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது அச்சுறுத்தலுக்காக அல்ல, வீணான விளம்பரத்துக்காகதான். Y பிரிவு பாதுகாப்பு போதாதா? ஏன் இவ்வளவு ஆடம்பரம்? தமிழ்நாட்டையே தமிழகம் என்று அழைக்க பெருமைபடும் கன்னடருக்கு நம் பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக ஏழை, எளிய சாமானியர்களுக்கு அதே பணத்தை செலவழித்திருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.