ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவுக்கு வழங்க மறுக்கும் அதிமுக! சமாதான சந்திப்பு

 
GKvasan

இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவுக்கு வழங்க அதிமுக மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

tn

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  2021 சட்டமன்றத் தேர்தல் போல அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட  விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகின. இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனை அதிமக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், “அதிமுக உடன் சுமூகமான உறவுடன் ஒத்த கருத்துடன் உள்ளோம். தற்போதைய அரசியல் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி மிக முக்கியமானது. எனவே அதிமுக மூத்த தலைவர்கள் உடன் வெற்றி யூகங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும் என்பதே இலக்கு.  

Image

திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தியுள்ளது. எனவே ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலில் தமாகாவுக்கு தொகுதியை வழங்காமல் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாகவும், ஜி.கே.வாசனை சமாதானம் செய்யவே சந்திப்பு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.