இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஆதரவா? - ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி

 
GK Vasan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஆதரவு தெரிப்பீர்களா? என்ற கேள்விக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பதிலளித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 

Ops

இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கோரினார். இதுகுறித்து ஜி.கே.வாசன் கூறி இருப்பதாவது: இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ், அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் உரிய நிலைப்பாட்டினை தேர்தல் களத்தில் பிரதிபலிக்கின்றனர். ஓபிஎஸ் உங்களிடம் ஆதரவு கேட்டால், தங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என செய்தியாளர் கேட்டதற்கு, அது அவரது உரிமை, அவரது முடிவு. இதுபற்றி இப்போது கருத்து கூற முடியாது. என கூறினார்.