ஜி. கே. மணி மருத்துவமனையில் அனுமதி -தொலைபேசியில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

 
gk

பாமக கௌரவத் தலைவர் ஜி. கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

gk

 பாமகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய கௌரவ தலைவருமான ஜி.கே. மணி,  பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.   ஜிகே மணி அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

 இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ஜி .கே. மணி கறி விருந்தில் பங்கேற்று சாப்பிட்டு இருக்கிறார்.  அதன் பின்னர் செரிமான பிரச்சனையால் அதிகம் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதை அடுத்து அவர் சேலத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.    அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜிகே மணியின் உடல் நலம் குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் விசாரித்துள்ளார்.