12 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல்

 
puducherry

12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மார்ச்சில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ., செல்வம் போட்டியின்றி  தேர்வு.! | Pudhucherry-Assembly-Win-Bjp-Specker

 

புதுச்சேரி மாநில கபடி சங்க பொதுக்குழு கூட்டம், அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், கபடி சங்கத்திற்கான எதிர் வரும் 2023-2027 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் கபடி சங்கத்தின் புதிய தலைவராக திருமதி. விஜயராணி ஜெயராமன், பொது செயலாளராக கோவி ஆறியசாமி, பொருளாளராக கபிலன் மற்றும் துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். இதன் தேர்தல் அதிகாரியாக அரசு வழக்கறிஞர் விநாயகம் செயல்பட்டார். 

இந்த தேர்தலின் மேற்பார்வையாளர்களாக, புதுவை மாநில விளையாட்டு ஆணையத்தின் அதிகாரி  சண்முகம், இணை செயலாளர் வளவன் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளின் பதவிகாலம் 4 ஆண்டுகள் ஆகும். புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா, சபாநாயகர் செல்வம் தலைமையில் நடைப்பெற்றது. விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழாவில் பேசிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரி கபடி சங்கம் சுறுசுறுப்பாகவும், விறு விறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது. கபடி சங்கத்தின் கோரிக்கைகள் இந்தாண்டிற்குள் நிறைவேற்றப்படும். கடந்த 15 வருடங்களாக விளையாட்டுதுறைக்கு எதுவும் செய்யவில்லை. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பணம், விருதுகள், ஊக்கத்தொகை என எதுவும் வழங்கபடவில்லை. இது தான் உண்மை. புதுச்சேரி அரசின் குறையாக இது உள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மார்ச் மாதம், முழு பட்ஜெட் தாக்கல் செய்யபடும். விளையாட்டு துறை என தனி துறையாக ஒதுக்க, பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால், முதல்வர் நிறைவேற்றி கொடுப்பார். இதற்கு உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். விளையாட்டு துறை தனித்துறையாக ஒதுக்கி, அதிகாரிகள் நியமிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.