முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..

 
  திண்டுக்கல் சீனிவாசன்


அதிமுக பொருளாளரும் , முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

முன்னாள் அமைச்சரும்,  அதிமுக பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நேற்று இரவு  நெஞ்சுவலி  ஏற்பட்டது.  இதனையறிந்த அவரது குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில்  உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..

ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் தற்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதாலும், அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதாலும்,  அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையை  இருதய சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டனர்.  தற்போது திண்டுக்கல் சீனிவாசன் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை  மருத்துவமனை தரப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.