எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கவே இந்த சோதனை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 
jayakumar

எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் தடுக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு சோதனை நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

 
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை சோதனை செய்து வரும் நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல்  தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்  சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது

jayakumar

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் தடுக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு சோதனை நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். . இது குறித்து அவர் கூறியதாவது ; முதல் அமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று செயலாற்றுகிறார். எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர் காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். மின்கட்டண உயர்வை மக்கள் மறக்க ரெய்டு நடத்தப்படுகிறது.என தெரிவித்துள்ளார்.