முதலமைச்சர் என்னை எதிரியாக நினைப்பது எனக்கு பெருமையே - எஸ்.பி.வேலுமணி

 
SP velumani

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக நினைப்பது தனக்கு பெருமை தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவை பி.கே.புதூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைசெயலாளர் நடிகை விந்தியா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். விழா மேடையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் மீது கோபம். கோவையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஏதுனும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா?. மூன்று முறை எனது வீட்டில் சோதனை நடத்தி விட்டார்கள். சோதனையில் மூலம் தொந்தரவு செய்கின்றனர். என் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கோபம்?, இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக நினைப்பது தனக்கு பெருமை தான். இவ்வாறு கூறினார்.