தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள் - ஆர்.பி.உதயகுமார் அதிரடி

 
rb udhyakumar

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்தினால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியே முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என விரும்புவது தெரியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரையில் நேற்று நடைபெற்ற அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன் பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.வே அவரிடம் பேசுவதில்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் வந்து பேசுகிறார்கள் என்று அவர் 'புரூடா' விட்டுக்கொண்டிருக்கிறார்.  எடப்பாடி பழனிசாமி இருக்கும் பதவியே  தற்காலிகமான பதவி. இந்த தற்காலிக பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதி இருக்கிறதா? நானும் இந்த நாட்டில் இருக்கேன் என்று காட்டிக்கொள்வதற்காகதான், காமெடி கதையை எல்லாம் விட்டுக்கொண்டிருக்கிறார் என கூறினார். 

rb

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்கள் சந்தித்த அ.தி.மு.க.  முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அப்படி நடத்தினால், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியே முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என விரும்புவது தெரியும் என்றார். தன் நிலை மறந்து முதலமைச்சர் வசைபாடியிருப்பது அந்த பதவிக்கு அழகல்ல என்றும் அவர் கூறினார்.