ஆ.ராசாவின் பேச்சு அபத்தமானது... அவரால் நாடே கொந்தளித்துள்ளது - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

 
rb udhyakumar

திமுக எம்.பி ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சாக உள்ளது எனவும், ஆ.ராசாவின் பேச்சால் நாடு கொந்தளித்து உள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக எம்.பி ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சாக உள்ளது. எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு உள்ளதாக கூறவில்லை. நாட்டிற்கு தேவையானவைகளை பேசாமல் ஆ.ராசா தேவையற்றவைகளை பேசி வருகிறார். ஆ.ராசாவின் பேச்சால் நாடு கொந்தளித்து உள்ளது. ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. ஆ.ராசாவின் கருத்து ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாக தான் பார்க்க வேண்டும். எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆ.ராசாவை கண்டிக்க வேண்டும். முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள். தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் கூறினார்.