வேலை வாங்கித் தருவதாக மோசடி - அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சரண்!!

 
saroja

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சேர்ந்த குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் ஒன்றை அளித்தார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 76.50 லட்சம் பெற்று, வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில்  சரோஜா மீது குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

saroja

இதனிடையே முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சரோஜா மற்றும் அவரது கணவர்மனுதாக்கல் செய்த  நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.  அதன்படி 25 லட்சம் ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் இருவரும் இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

money

இந்நிலையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76.50 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில், ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் முன்னாள் அமைச்சர் சரோஜா.அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.