அண்ணா வழியில் வந்தவர்கள் என சொல்லிக்கொள்ள திமுகவுக்கு அருகதை இல்லை - ஜெயக்குமார்

 
jayakumar

அண்ணா வழியில் வந்தவர்கள் என சொல்லிக்கொள்ள திமுகவுக்கு அருகதை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணா துரை வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள திமுகவுக்கு அருகதை இல்லை. அண்ணாதுரை வழியில் ஆட்சி செய்கிறோம் என்று கூறிக்கொள்ளும் திமுகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாது. திமுக அரசு பெயரளவில் திட்டங்களை செயல்படுத்துகிறது. விளம்பத்திற்காக மட்டுமே சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.ஜெயலலிதாவாக என்னை பார்க்கிறார்கள் என சிரிக்காமல் ஜோக் சொல்கிறார். திமுக அரசு எதிர்கட்சிகளை முடக்கும் நோக்கில் செயல்படுகிறது. நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதல் முயற்சி எடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.மீனவ மக்களை பழங்குடியின வகுப்பில் சேர்க்க கோரிக்கை வைத்தும் திமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை.  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ருட்டி ராமசந்திரன் இடையேயான சந்திப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.