தினகரனுடன் கூட்டு சேர்ந்து ஓபிஎஸ் பாழாய் போய் விட்டார் - ஜெயக்குமார் விமர்சனம்

 
jayakumar

ஒற்றை தலைமையை ஏற்றிருந்தால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மரியாதை கிடைத்திருக்கும் எனவும், தினகரனுடன் கூட்டு சேர்ந்து பாழாய் போய்விட்டார் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியார், 105வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அளித்த பேட்டி: கோஷ்டிக்கும், கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. பன்னீர்செல்வம் என்பவர் கோஷ்டி. கட்சி என்றால், மக்கள் பிரச்னைக்கு போராட வேண்டும். அவரிடம் பலம் இருந்திருந்தால், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் அறிவித்திருக்கலாமே; கூட்டம் நடத்த ஆள் இல்லை.தினகரனுடன் கூட்டு சேர்ந்து, பாழாய் போய் விட்டார் பன்னீர்செல்வம். ஒற்றைத் தலைமையை ஏற்றிருந்தால், அவருக்குரிய மரியாதை இருந்திருக்கும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.