விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் கைது

 
arrest

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

fire

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் கீழ்த்திருத்தங்கல்  கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் நேற்று காலை எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் கீழ்த்திருத்தங்கல்லை  சேர்ந்த ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அத்துடன் இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ் என்பவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இவ்விடத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன்,  மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். அத்துடன் காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

fire

இந்நிலையில் விருதுநகர் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய், ஒப்பந்ததாரர் கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.