கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மாநில மனித உரிமை ஆணையம்..

 
 மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து  வழக்குப்பதிவு செய்துள்ளது. 

காலில் சுளுக்கு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவருக்கு காலையே எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  பின்னர் தொடர்ந்து  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.  இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மாநில மனித உரிமை ஆணையம்..

 கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.. அத்துடன் ஓரிரு நாட்களில் பிரியாவின் முழு மருத்துவ அறிக்கை வெளியிடப்படுமென  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

 பிரியா மரணம் தொடர்பாக 6 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு  சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பிரியா மரணம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தர மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.   

 கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மாநில மனித உரிமை ஆணையம்..