ஆரணியிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

 
Arani

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவத்தில் எதிரொலியாக தமிழகம் முழுவது அதிரடி சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஆரணியில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி தேவாநந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் தேவநந்தாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதாக விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் பயிலும் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் ஒரத்தநாட்டில் உள்ளதுரித உணவகத்தில் நேற்று இரவு ஷவர்மா சாப்பிட்ட நிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கு உடனடியாக அருகில் இருந்து மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள அசைவ உணவகங்கள் மற்றும் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

arani

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பஜார் வீதி மார்க்கெட் வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசைவ உணவகம் மற்றும் ஹோட்டல்களில் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் 15க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து வர்மர் போன்ற சிக்கன சம்மந்தபட்ட உணவை பரிசோதனைக்காக பறிமுதல் செய்தார். இதேபோல் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றி தலா ஒரு கடைக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.