நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோ ஆப்கள் முடக்கம்!

 
swiggy zomato

நாடு முழுவதும் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோவின் செயலிகள் ஒரே நேரத்தில் முடங்கியதால் உணவுகளை ஆர்டர் செய்ய முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

Swiggy: Today Latest News, Photos, Videos about Swiggy - Zee Business

ஆன்லைன் உணவு விநியோக செயலிகள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி, இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு உணவு டெலிவரி வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தொழில்நுட்பக் காரணமாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ செயலிகள் திடீரென முடங்கின. இரண்டு செயலிகளும் ஒரு மணிநேரத்துக்கு மேலாக முடங்கி இருப்பதால் உணவுகளை ஆர்டர் செய்ய முடியாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். ஆனால் சம்பந்தபட்ட அந்த இரு நிறுவனங்களும் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.