தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலை தொடர்ந்து அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

 
dengue

தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

5 Things We Now Know About Tropical Disease Dengue Fever | Johnson & Johnson

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ளிட்ட நகரங்களில் இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் , 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 1 அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 1 அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளது. இவற்றில் தற்போது பெரும்பாலான இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது. பருவமழை காலத்திற்கு முன் பரவும் காய்ச்சல் தற்போது அதிகளவில் பரவுவதால், தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவகால மாற்றத்தால் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பொதுவாக மக்கள் தொகையில் 1% காய்ச்சல் இருப்பது இயல்பு. பருவகாலத்தில் இது 1.5% உயர்வதும் இயல்பு என மக்கள் வாழ்வு துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் 5 வயதுக்குட்பட 53 குழந்தைகளுக்கும், 5 -14 வயதுக்குட்பட்ட 61 குழந்தைகளுக்கும் என மொத்தம் 1267 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் அச்சம் கொள்ள அவசியம் இல்லை. நம்மிடம் சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ளது என்றார். 

நகராட்சி நிர்வாக துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் மருத்துவ துறை இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது ஜனவரியில் இருந்து இதுவரையில் 5064 நபர்களுக்கு H1N1 மாதிரி சோதனை எடுக்கப்பட்டத்தில் 1267 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 11 நபர்கள் உயிர் இழந்துள்ளனர். H1N1 அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் தான் அரசு மருத்துவமனையில் மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால் தற்போது குழந்தைகள் மத்தியில் ஃப்ளூ காய்ச்சல் தொற்று பரவி வருகிறது. இதனிடையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.