சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி!!

 
govt

சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும்,  13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.  இவரது பிறந்த நாள் வருகிற ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் , இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  அத்துடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என்றும் அண்ணா,  பெரியார் சிலைகளுக்கு நடுவே கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்றும் இதன் திறப்பு விழா ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
ttn

இந்நிலையில் ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி  நடைபெறுகிறது.  புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்களால் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏற்காடில் 45வது கோடைவிழா வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.   5 லட்சம் மலர்களைக் கொண்டு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.