குற்றாலம் அருவிகளில் குளிக்க திடீர் தடை

 
Courtallam

கேரளாவில் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து  பாதுகாப்பு கருதி  குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பாவுருட்டி அருவி வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kuttralam Main Falls - Tamilnadu Tourism Info

கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த இரு நாட்களாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை வெள்ளாப்பெருக்கு குறைந்ததால் அந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதனிடையே குற்றாலத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சாரல் திருவிழா நடைபெறவுள்ளது. வரும் ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இதனை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கிறார்.ஆகஸ்ட் 5 முதல் 10 நாட்கள் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் புத்தக கண்காட்சி நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.