ஆளுநரின் கான்வாய் நோக்கி தாக்குதல் - தமிழக டிஜிபிக்கு பறந்த புகார் கடிதம்!!

 
tn

தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கருப்புக் கொடிகளை வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபி கடிதம் அனுப்பியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநரின் வாகனம் சென்றபோது நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ,திராவிடர் விடுதலை கழகம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.  மன்னம்பந்தல் என்ற இடத்தில் சாலையோரம் குழுமியிருந்த போராட்டக்காரர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  அப்போது ஆளுநரின் கால்வாய் சென்றபோது காவல்துறையினரின் பாதுகாப்பை மீறி கால்வாய் மீது கொடிகள்  மற்றும் கொடி கம்புகளும் வீசப்பட்டது.

tn
இருப்பினும் இதனால் எந்த பாதிப்பும் இன்றி ஆளுநரின் கால்வாய் கடந்து சென்றுவிட்டது.  ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவியை விட்டு விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். 

tn

இந்நிலையில் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 இன்படி அதாவது உள்நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரை தாக்குதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி  விஸ்வேஷ் பி.சாஸ்திரி தமிழக  டிஜிபிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.  இதனிடையே ஆளுநருக்கு  எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.