சென்னை காமராஜர் சாலையில் முதல் நாள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..

 
சென்னை  காமராஜர் சாலையில் முதல் நாள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை.. 


சென்னை காமராஜர் சாலையில்  குடியரசு தின,  முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா, சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அந்தப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இந்த ஆண்டு குடியரசு தின  விழாவை வேறு பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டது.  அதன்படி பல கட்ட  ஆலோசனைக்கு பின் மெரினா கடற்கரையில்,  காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சுதந்திர தின ஒத்திகை

இதனையொட்டி  விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.  இந்நிலையில் இன்று முதலாவது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், தமிழக காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, நீலகிரி படைப்பிரிவு, கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை,  தீயணைப்புத்துறை வனத்துறை, கமோண்டோ படை, முன்னாள் ராணுவ வீரர்கள்,  ஊர்க்காவல் படை வீரர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்  ஆகியோர் பங்கேற்றனர்.

குடியரசு தின விழா காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதனையொட்டி  22, 24, 26-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் 20 துறைகளை சேர்ந்த வாகனங்கள் இந்தாண்டு இடம்பெற உள்ளன.