'வாரிசு' கொண்டாட்டம்- தீப்பொறியால் வெடித்த ஹீலியம் பலூன்

 
varisu

பூந்தமல்லி அருகே வாரிசு பட கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹுலியம் கேஸ் பலூனில் பட்டாசு நெருப்பு பட்டு பெரும் தீவிபத்து ஏற்பட்டது.


பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஈவிபி சினிமாஸில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் மற்றும் விஜய் ஆகியோரது படங்கள் இன்று ஒரே நாளில் இன்று வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கட்அவுட், பேனர் வைத்து பட்டாசு வெடித்து பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை ஈவிபி சினிமாஸில் விஜய், அஜித் ரசிகர்கள் கட்  அவுட்டிற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக திரையரங்கத்தின் வெளியே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹூலியன் கேஸ் பலூன் மீது கொண்டாட்டத்திற்காக வெடிக்கப்பட்ட பட்டாசு தீப்பொறி எதிர்பாராத விதமாக பட்டது.

இதையடுத்து கேஸ் பலூன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட விஜய் ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை உடனடியாக அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். பின்னர் இரு தரப்பு ரசிகர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஹீலியம் கேஸ் பலூனை அங்கிருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதையடுத்து துணிவு படம் பார்க்க வந்த அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து இருவரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.