அம்பத்தூர் தொழிற்பேட்டை தனியார் கேஸ் ஏஜென்சியில் தீ விபத்து

 
tn

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கெமிக்கல் மற்றும் கேஸ் ஏஜென்சியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

tn

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அண்ணாநகர் பகுதியில் சேர்ந்த ராம்குமார் என்பவர் விஜயா கெமிக்கல்ஸ் அண்ட் டாய்லெட் ஒர்க்ஸ்,  எம் ஜே வி இந்தியன் கேஸ் ஏஜென்சி மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகங்களை நடத்தி வருகிறார்.  இவர் வழக்கம் போல நேற்றிரவு 10 மணி அளவில்  அனைத்து அலுவலகங்களையும் மூடிய பிறகு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அப்போது இரவு நேர காவல் பணியில் செல்வராஜ் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது.  

tn

சுமார் நள்ளிரவு 2 மணி அளவில் நிறுவனத்திற்கு சொந்தமான ரெகார்ட் ரூமில் தீ பற்றியது  கண்டு அதிர்ச்சி அடைந்து செல்வராஜ் , உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.  தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள்  கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.