தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

 
voters

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

vote

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. கடந்தாண்டு நவ.9-ம் தேதி முதல் டிச.8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்பட்டன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி  ஒவ்வொரு ஆண்டும்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தமிழக தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த நவ.9-ம் தேதி முதல் டிச.8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்பட்டன.

vote

அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் 6,18,26,182 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து இறுதியாக பெயர் சேர்க்க 10,34,018 விண்ணப்பங்கள், பெயர் நீக்க 7,90,555 விண்ணப்பங்கள் உட்பட 23,03,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன்று அனைத்து மாவட்டங்களிலும் வெளியாகவுள்ளது. இதையடுத்து, தேசிய வாக்காளர் தினமான ஜன.25-ம் தேதி புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.