பேருந்து நிறுத்தத்தில் ஆசிரியர் முன்பாகவே குடுமிப்பிடி சண்டையிட்ட மாணவிகள்

 
Students

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆசிரியர் முன்பாகவே பள்ளி மாணவிகள் சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பள்ளி மாணவிகள்

திருநெல்வேலி மாநகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வந்து தங்களது கல்வி நிலையங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று பள்ளி முடிந்து மாணவிகள் வீடுகளுக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மாணவிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர் முன்பாகவே மாணவிகள் சண்டையிட்டு  ஒருவரை ஒருவர் தாக்கிக் தாக்கிக் கொண்டுள்ள நிலையில் அங்கிருந்து ஆசிரியர்கள் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றும் அதை கண்டுகொள்ளாமல் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட முதலில் அரை நிர்வாணமாக பிரதான சாலையில் மாணவர் ஒருவர் ஓட விட்டு தாக்கப்பட்ட காட்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது மாணவிகள் ஆசிரியர்கள் முன்பாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.