சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி - கட்டையால் தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்

 
காங்கிரஸ்

சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே அடிதடி ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். நெல்லை கிழக்கு மாவட்ட அகாங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து நிர்வாகிகள் ஒருவரைக்கொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டதால் கலவரம் மூண்டது. இதையடுத்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரின் ஆதரவாளர்கள், தலைமை அலுவலகத்தில் இருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.