வணிகர்கள் நலனை கருத்தில் கொண்டே வணிகவரித்துறையின் செயல்பாடுகள் இருக்கும்!!

 
tn

வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் வணிகவரித்துறையின் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Moorthi

வணிகவரித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சோதனைக்கொள்முதல் முறையை மறு பரிசீலனை செய்திடுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கோரிக்கை அளித்ததன் அடிப்படையில், இன்று (10.01.2023) காலை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முதன்மைச்செயலாளர் வணிகவரித்துறை ஆணையாளர் திருதீரஜ்குமார் இஆப. வணிகவரித்துறை அரசுச் செயலாளர் திருமதி.பா.ஜோதிநிர்மலாசாமி இஆப., அவர்களுடன் இக்கூட்டமைப்பினர் கலந்தலோசனை செய்தனர். 

tn

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விக்ரமராஜா  சோதனை கொள்முதல் குறித்து வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அரசிற்கும் வணிகர்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதனை கவனமாக விரிவாக ஆராய்ந்து வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் வணிவரித்துறையின் செயல்பாடு குறித்தான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. வணிகர்களிடையே தாங்கள் வழங்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் விலைப்பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக வணிகர் சங்க பிரிதிநிதிகள் உறுதியளித்தனர். வணிகர்கள் நலனை கருத்தில் கொண்டே வணிகவரித்துறையின் வரி வசூலிப்பு செயல்பாடுகள் இருக்கும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூட்டத்தில் தெரிவித்தார்.