பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை

 
court

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்குத் தண்டனை வழங்கியுள்ள சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

சென்னை கிண்டியில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை பாலியல் வன்கொடுமை செய்வதாக தோழிகளிடம் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவரின் தோழிகள் மூலமாக அவர் பல்வேறு தொண்டு அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் செஸ் சைல்டு லயன் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தந்தை மற்றும் உடந்தையாக இருந்த தாய் இருவரையும் கைது செய்தனர். தந்தைக்கு எதிரான புகாரில் சிறுமி ஏழு வயதில் இருந்து 16 வயது வரை தனது தந்தை பாலியல் வன்கொடுமை செய்யதாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு கர்ப்பம் அடைந்த போது இந்த தகவலை தனது தாயிடம் தெரிவித்தாகவும், அப்போது தாய்  கருவை கலைத்ததாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கபட்டது.

court

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டதால் முதல் குற்றவாளியான தந்தைக்கு தூக்கு தண்டனை விதிப்பதாகவும் அவரை சாகும் வரை தூக்கிலிடப்பட்ட வேண்டும் எனவும், தாய்க்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாகவும் அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எம்.ராஜலட்சுமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.