வெளியில் சொன்னால் அம்மா, தங்கையை கொன்றுவிடுவேன்! பெற்ற மகளை மிரட்டி வன்கொடுமை செய்த தந்தை

 
rape

விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த ஜெகஜோதி மணி ( 43), இவர் ஹார்டுவேர் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அன்பு செல்வி (36) தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 

Rape Images – Browse 112,697 Stock Photos, Vectors, and Video | Adobe Stock

மூத்த மகள் 9ம் வகுபும் இரண்டாவது மகள் தனியார் பெண்கள் பள்ளியில் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அன்புசெல்வியின் கணவர் ஜெகஜோதிமணி வேலைக்கு சென்றுவிட்டு மதியம் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

மூத்த மகள் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கு செல்லாமல் அன்று வீட்டில் இருந்த போது, ஜெகஜோதிமணி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் கடந்த 3 மாதமாக தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை தாய்,மற்றும் தங்கையிடம் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி, வலுக்கட்டாய பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தையின் தொல்லை தாங்கமுடியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். பள்ளிக்குச் சென்றபோது அந்த கடிதம் தவறி விழுந்து அவர் படிக்கும் தலைமை ஆசிரியையின் கைக்கு கிடைத்ததுள்ளது. தலைமை ஆசிரியர் தாய் அன்பு செல்வியை பள்ளிக்கு அழைத்து சிறுமியிடம் விசாரித்தபோது அழுதுகொண்டே தந்தை ஜெகஜோதி மணி செய்த பாலியல் தொந்தரவுகளை கூறியுள்ளார். இதுகுறித்து தாயார் அன்புச்செல்வி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகஜோதிமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.