காதல் திருமணம் செய்து கொண்ட மகள், மருமகனை கொலை செய்து தந்தை

 
death

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் செல்வி நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு ரேஸ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

Murder in broad daylight in Kerala's Trivandrum, receptionist hacked to  death - India News

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு இருவரும் வீரப்பட்டி ஊருக்கு வந்து மாணிக்க ராஜாவின் தாய் வீட்டில் தங்கி உள்ளனர் மாணிக்கராஜாவின் தாய் இன்று வேலைக்கு சென்று இருந்த நிலையில்  மாலை வேலை முடிந்து வந்து வீட்டை திறந்து பார்க்கும் போது வீட்டில் மகன் மாணிக்கராஜ் மற்றும் ரேஸ்மா இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த எட்டயபுரம்   காவல் துறையினர் இருவர் உடலை கைப்பற்றி  உடல் கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலையை ரேஸ்மாவின் தந்தை முத்துகுட்டி செய்துள்ளதாக கூறப்படுகிறது தற்போது  முத்துக்குட்டி  தலைமறைவாக  உள்ளார்.

சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள முத்துக்குட்டியை தேடி வருகின்றனர் கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகன் மருமகனை தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.