தாயுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகன்!

 
murder

குடும்ப தகராறு காரணமாக தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32-yr-old Murdered Over 500 In Vizag | Visakhapatnam News - Times of India

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட  குளபதம் என்ற ஊரைச் சேர்ந்தவர் வையக்கிழவன். இவரது முதல் மனைவியை பல ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவதாக சுப்புலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுப்புலட்சுமிக்கும் இவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இதனுடையே வையக்கிழவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு எதிரிலேயே குடியிருந்து வந்தார்.

இதனால் இரண்டாவது மனைவிக்கும் வையக்கிழவனுக்கும் இடையே அவ்வப்போது தகராறு சண்டை கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று தன்னுடைய வீட்டுக்கு அருகில் வையக்கிழவன் இயற்கை உபாதையை கழித்துவிட்டு செல்வதாக கூறி பக்கத்து வீட்டாரிடம் இரண்டாவது மனைவி சுப்புலட்சுமி வையக்கிழவன் மீது புகார் கூறியதை தொடர்ந்து வையக்கிழவனுக்கும் இரண்டாவது மனைவி சுப்புலட்சுமிக்குமிடையே  வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுப்புலட்சுமி அடுத்த ஊரில் இருந்த தன்னுடைய மகன் வசிந்திரனுக்கு தகவல் தெரிவிக்கவே மகன் தன்னுடைய தாய்க்கு ஆதரவாக அப்பாவுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டையில் அப்பா மகன் தாய் மூன்று பேரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

சண்டை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி வீட்டில் மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் இருந்த தரக்கம்பை எடுத்து கொடுத்து அடிக்கச் சொல்லவே மகன் வசிந்திரன் அந்த கம்பால் அப்பாவின் வயிற்றில் குத்தியதில் உடனடியாக சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே வையக்கிழவன் இறந்து போனார். கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பாவை குத்தி கொலை செய்ததாக மகன் வசிந்திரணையும் அதற்கு உடந்தையாக இருந்ததாக மனைவி சுப்புலட்சுமியையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்