குடும்ப தகராறில் 8 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை

 
fire accident

ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்த மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் எட்டு வயது மகனை பெட்ரோல் ஊற்றி  எரித்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தீக்குளிப்பு

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், வடமாலைப்பேட்டை மண்டலம், பட்டிகண்டிரிகாவை  சேர்ந்த ரமேஷ் (42), அதே ஊரை சேர்ந்த ஐஸ்வர்யா (32) என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ரேணிகுண்டா அருகே உள்ள டிக்சன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மகேஷ் (8)  மற்றும் 5 வயது மகள் உள்ளனர். மகேஷ் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில்  மற்றொரு குழந்தை வீட்டில் உள்ளது.  

இந்நிலையில்  தம்பதியினர் இருவரும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு  ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மூன்று நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மனைவியை கடுமையாக ரமேஷ்  தாக்கியதில் ஐஸ்வர்யா கை உடைந்தது. இதனால் ஐஸ்வர்யா ஈசுலாபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு மகளை அழைத்து கொண்டு சென்றார்.  ஆனால் வீட்டில் மகன் தனியாக இருப்பான் என்பதால் ஞாயிற்றுக்கிழமை மகனைப் பார்க்க வீட்டிற்கு வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கணவன்-மனைவி இடையே சமைக்காதது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  

கை உடைந்த நிலையில் எப்படி சமைப்பது என்று ஐஸ்வர்யா கூறியதால் ரமேஷ் ஐஸ்வர்யாவை மீண்டும் தாக்கினார். இதனால் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறினார். இதனால்  ரமேஷின் தாயார் காவல் நிலையம் சென்று தனது மகன் தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதால் வீட்டை விட்டு சென்ற மருமகள் ஏதாவது செய்து கொள்வால்  என்று புகார் அளித்துள்ளார்.  உடனே போலீசார் ரமேஷை போன் செய்து காவல் நிலையத்திற்கு வரும்படி கூறினர். இதனால் பீதியடைந்த ரமேஷ், மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக நம்ப வைக்க மகன் மகேஷ் காலில் ஆசீட் ஊற்றி கொண்டதாகவும் புத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி சென்றான். அதன் பிறகு வீடு திரும்பும் வழியில் பெட்ரோல் வாங்கி கொண்டு  மது அருந்தி வீட்டிற்கு சென்று மனைவியை தேடிய நிலையில் எங்கும் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கும் போதே  பெற்ற மகன் என்றும் பார்க்காமல் மகேஷ்  மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். 

உடனடியாக அப்பகுதி மக்கள் தீயை அனைத்து பலத்த காயமடைந்த மகேஷை 108 ஆம்புலன்ஸில் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தீ விபத்தால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான வார்டில் மகேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடமாலைபேட்டை எஸ்.ஐ. ராமஞ்சநேயலு வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.