'கட்டண கொள்ளையை' தடுக்க ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம்

 
omni bus

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

bus

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.3000 கட்டணம் வசூலிக்கப்படும்  நிலையில் அரசு கண்காணித்து உரிய நடவடிக்கைஎடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

bus strike

இந்நிலையில் விழா காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு  எழுந்ததன் எதிரொலியாக ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
http://aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.