நீட் தேர்வில் தோல்வி - மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மாணவி லக்ஷனா ஸ்வேதா விரக்தியில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். மகள் லக்ஷனா ஸ்வேதா தூக்கில்  தொங்குவதை கண்ட பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

suicide

இதை தொடர்ந்து  அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  மகளை மீட்ட பெற்றோர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

neet

முன்னதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், தேர்வு முடிவுகள் வந்த பிறகு தேர்ச்சி பெறாத குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மன ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களை பெற்றோர்கள் திட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, தேர்வு என்பது எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார்.