ராமஜெயம் கொலை - உண்மை கண்டறியும் சோதனை!!

 
tn

ராமஜெயம் கொலை  வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

tn

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.  ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக மோகன்ராம்,  நரைமுடி கணேசன்,  தினேஷ்,  செந்தில்,  தென்கோவன் என்கின்ற சண்முகம் , சத்யராஜ்,  திலீப் என்கின்ற லட்சுமி நாராயணன்,  சாமி ரவி,  ராஜ்குமார் , ஷிவா என்கின்ற குணசேகரன்,  சுரேந்தர் , கலைவாணன்,  மாரிமுத்து ஆகிய 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவினர்,  திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  உண்மை கண்டறியும் சோதனைக்கு தென் கோவன் என்கின்ற சண்முகம் ஒப்புதல் அளிக்காத நிலையில் மீதமுள்ள 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

tn

இதைத்தொடர்ந்து 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நீதிபதி சிவகுமார் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் மோகன்ராம், நரை முடி கணேசன், சத்யராஜ் ஆகியோரிடம் சோதனை நடைபெற்று வருகிறது, டெல்லியில் இருந்து வந்துள்ள தடயவியல் நிபுணர்கள் 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துகின்றனர்.